துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 11.30 மணி அளவில் டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வத்துடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் உடன் சென்றனர். இவர்கள் அனைவரும் முன்னதாக எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து சட்டமன்றத்தில் ஓட்டு போட்ட அணி என்பது குறிப்பிடத்தக்கது

Special Correspondent

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் பரிமாற்ற தரவுகளை பாதுகாத்திடவும், தங்குதடையற்ற தொடர் சேவை வழங்கிடவும், திருச்சிமாவட்டம், நவல்பட்டில் அமைந்துள்ள எல்கோசெஸ்சின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் ரூ.59 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில தரவு மையத்திற்கான பேரிடர் மீட்பு மையம், ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலந்தாய்வுக் கூடம், விருந்தினர் கூடம் மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகத்தின் www.tamilvu.orgஎன்ற இணையதளம் ரூ.12 லட்சத்து 26 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்துவைத்தார்.

மோடி சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், செய்தியாளர்கள் அடுத்தடுத்து சரமாரியாக எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கி தள்ளவே முக்கியமாக ஜெ.க்கு பிடித்த பச்சை நிறம் மாறி தற்போது ஒரு பேனர் கூட காவி நிறத்தில் உள்ளதே என்ற கேள்விக்கு வெறுப்பில் "உங்கள் பார்வையில் உள்ள குறைப்பாடு அது. நீங்கள் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறீர்கள், என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அந்த கேள்வியை மட்டும் கேளுங்கள்" என்ற பதிலை சொல்லிவிட்டு சென்றார்.

நடராஜன் (ஜெயலலிதா தோழி சசிகலா கணவர்) அறுவை கிகிச்சைகாக முறையற்ற முறையில் பழனிச்சாமி தலைமையில் உள்ள மாநில அரசு உதவியுடன் உறுப்புகள் பெற பட்டதாக ஆதாரங்கள் வந்த நிலையில், மேலும் ஓ பி எஸ் அணிக்கு எந்த முக்கியத்துவம் தரப்படாத நிலையில், ஓ பி எஸ் கோஷ்டி மட்டுமே மோடியை சந்தித்து உள்ளது பிஜேபி அதிமுகவின் உள்கட்சி நடவடிக்கையை கட்டுப்படுத்துவதன் ஊர்ஜிதம் என்று மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவித்தார்