பஞ்சலோகத்தால் ஆன 600 ஆண்டுகள் பழமையான சுந்தரமூர்த்தி நாயனார் சுமார் 52 செ.மீ உயரம், 17 கிலோ எடை கொண்ட சிலையை உத்தரமேரூரில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதாக சென்னையை அடுத்த உத்தரமேரூரின் ஒழுகரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (25), தட்சிணாமூர்த்தி (29), சேகர் (28), மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த மகேந்திரன் (41) ஆகியோர் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஆரியப்பெருங்குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

Special Correspondent

பின்னர் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்விகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

1972-ல் இயற்றப்பட்ட, தொன்மையான பழமைச் சின்னங்கள் மற்றும் அரிய கலைப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டத்தில் காலத்துக்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக, ‘தொன்மையான பழமைச் சின்னங்கள் மற்றும் அரிய கலைப் பொருட்கள் ஒழுங்குபடுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு மசோதா’வை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது மத்திய அரசு.

அதற்கு முன்னதாக, அந்த மசோதாவின் முழு வடிவத்தையும் இணையதளத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வெளியிட்ட இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ), இதுகுறித்த ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவித் திருக்கிறது. ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி, தொன்மையான கலைப் பொருட்களை விற்பவர்கள் ஏ.எஸ்.ஐ லைசென்ஸ் பெறவேண்டும். அப்படி லைசென்ஸ் பெற்றவர்கள், தங்களிடம் உள்ள பழமையான கலைப் பொருட்களின் தொன்மை, அது தங்களிடம் வந்தவிதம், அது எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்பன உள்ளிட்டவற்றை ஏ.எஸ்.ஐ-யில் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், புதிய மசோதாவின்படி, தொன்மையான கலைப் பொருட்களை விற்க லைசென்ஸ் பெற வேண்டியதில்லை. தங்களிடம் உள்ள கலைப் பொருட்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் இஷ்டத்துக்கு விற்றுக் கொள்ளலாம். இவற்றை எல்லாம் யார் கண்காணிப்பது, யார் அனுமதி கொடுப்பது என்பதற்கான வெளிப்படையான விவரங்கள் மசோதாவில் இல்லை.

சிலைத் திருட்டு மற்றும் சிலைக் கடத்தல் கும்பல்களை இன்னும் பட்டவர்த்தனமாக செயல்பட வைக்கும் வகையில்தான் இருக்கிறது’ என்கிறார், சிலைக் கடத்தல் விவகாரங்களை அம்பலப்படுத்தி வரும் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பின் எஸ்.விஜய்குமார்.

சென்ற வருடம் நூறு கோடி மதிப்புக்கு மேல அரிய வகை சிலைகளை சென்னை ஆழ்வார்பேட்டையில் தொழிலதிபர் தீனதயாளன் கடத்தி விற்றது கண்டுபிடிக்கப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டார் காரணம் அவரிடம் லைசென்ஸ் இல்லை ஆனால் இப்போது உள்ள புது மசோதாவில் ஒரு வேளை அவர் பிடிபட்டு இருந்தால் அவர் தப்பித்து இருக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.