மத்திய அரசின் 18% ஜிஎஸ்டி வரி தவிர தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியை 10 சதவீதமாக உத்தரவிட்ட தமிழக அரசு, மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதம் என்று அரசு நிர்ணயித்தது.

Special Correspondent

இதனை எதிர்த்து பலவேறு கட்டங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நடிகர் சங்கம் போராட்டத்தை அறிவித்த நிலையில் கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக சினிமா திரையுலகினரை தமிழக அரசு அழைத்து பேசியது. அரசு தரப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி பங்கேற்றனர்.

3-ம் நாள் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகினர் சந்தித்து பேசினர். இதன் விளைவாக இரண்டு சதவீதம் மட்டுமே குறைத்து தமிழ் சினிமாக்களுக்கு கேளிக்கை வரி என்பது 8 சதவீதமாக ஆனது. மேலும் சினிமா தியேட்டர் அனுமதி கட்டணங்களை அரசு மாற்றி அமைத்துள்ளது.

பின்னர் தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்களிடம் "மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதம் கேளிக்கை வரி உள்ளது. அதையும் மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். எனவே புதிய படங்கள் வெளியாவதில் தடை நீங்கியது. தீபாவளிக்கு திட்டமிட்டபடி புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும். எங்கள் கோரிக்கையை கேட்ட முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கருணாசுக்கு நன்றி" என்று தெரிவித்தார்.

ரெண்டு சதவீதம் மட்டுமே குறைத்து நடிகர் சங்கத்தை நன்றி தெரிவிக்க வைத்ததை குறிப்பிட்ட அதிமுகவினர் இதனை முதல்வர் பழனிசாமிக்கு ராஜ தந்திர வெற்றியாக மகிழ்வுடன் தெரிவித்தனர்