தென்மேற்கு பருவமழை காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் கனமழை பெய்தது. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Special Correspondent

பெங்களூருவில் 115 ஆண்டுக்குப்பின் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்துள்ளது. மேலும் பெங்களூருவில் நேற்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல ஆயிரம் வீடுகளில் மழைநீர் புகுந்தது.

இதேபோல் பெரும்பாலான பெரிய அணைகள் நிரம்பியிருப்பதுடன், சிறு சிறு அணைகளும் நிரம்பி வருகின்றன. அணைகள் நிரம்பிய அதே நேரத்தில் விவசயிகள் சாகுபடி செய்திருந்த விளைப்பயிர்கள் பெரும் அளவில் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் இந்த மழைக்கு 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.