தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை அறிக்கை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் கட்சிகளின் சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்த ஆய்வறிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

Special Correspondent

அந்த அறிக்கையில், கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் அரசியல் கட்சிகளில் ரூ.893.88 கோடி சொத்துகளைக் கொண்டிருந்த பாஜக, இந்தியக் கட்சிகளிலேயே மிக அதிக சொத்து மதிப்பைக் கொண்ட கட்சியாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக-வின் சொத்து மதிப்பு, கடந்த 11 ஆண்டுகளில் 627 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. பாஜக, கட்சி சொத்து மதிப்பு சில ஆண்டுகளில் மிக வேகமாகவும், சில ஆண்டுகளில் மிகக் குறைவாகவும் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சொத்து மதிப்பு நிலையான வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிஜேபி கட்சியின் வருமானம் 970.43 கோடிகள் என்றும் அதற்க்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் 593.31 வருமானம் கோடிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எங்கு இருந்து பணம் வருகிறது என்று தெரியாத கணக்கில் பிஜேபி கட்சி 460.78 பெற்றதாக கணக்கு காட்டியுள்ளது...

காங்கிரஸ் கட்சி இந்த முறையில் 186.04 வந்ததாக கணக்கு காட்டியுள்ளது . பிஜேபி கட்சி இந்த விஷயத்தில் காங்கிரஸ் விட 147% அதிகமாக உள்ளது.

லோக்பால் அமைப்பதை கடந்த மூன்றரை வருடமாக தவிர்த்து வரும் பிஜேபி அரசு அதனை நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்த மாதிரி கணக்கு காட்டாத இடத்தில இருந்து வரும் பணத்தை தவிர்த்து இருக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.