பட்டாசு புகையால் சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Special Correspondent

அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்றுமாசு அளவாகும். ஆனால் நேற்று பட்டாசு வெடித்ததன் காரணமாக 2.5 மைக்ரானில் 263 நுண்துகள்கள் உள்ளது.

மேலும் சென்னையில் மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் 3 இடங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மாலை 4 மணி நேர நிலவரப்படி காற்று மாசு அளவு 263 ஆக இருப்பதாக தெரிவித்துள்ளது. காற்றின் நுண் துகள்கள் அதிகம் கலந்திருப்பதால் மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும் எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. மயிலாப்பூர், கிண்டி, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களிலும் பட்டாசு வெடித்தால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக சுற்றுப்புற சூழல் காரணமாக காட்டி உச்சநீதிமன்றம் டெல்லியில் பட்டாசு விற்பனையை இந்த ஆண்டு முதல் முறையாக தடை செய்ததும் குறிப்பிடத்தக்கது .. இந்த தடை போல சென்னைக்கு வந்தால் தான் சுற்றுப்புற சூழல் மாசு படாமல் தீர்வு ஏற்படும் என்று ஆர்வலர்கள் கருத்து தெவித்துள்ளார்கள்.