டோட்லா, ஹட்சன், விஜய் உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்ட தடை தொடருவதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Special Correspondent

கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து குழந்தை உயிரிழப்பிற்கு சுகாதார சீர்கேடே காரணம் என்று குற்றம் சாட்டிய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் டெங்கு காய்ச்சல் தொடர் மரணம் காரணமாக திருவண்ணாமலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை முற்றுகையிட்டு நோயாளிகள் போராட்டம் நடத்தியுள்ளார்

மேற்கண்ட மூன்று தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறியிருந்தார். இதற்கு எதிராக தலா ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு மேற்கண்ட பால் நிறுவனங்கள் அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்துள்ளன.

அமைச்சர் ஆதாரங்களின்றி பேசுவதாகவும், தங்கள் நிறுவனங்கள் பற்றி பேச அவருக்கு தடை விதிக்க கோரியும் மனுவில் கோரியிருந்தன.

இவ்வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் 3 நிறுவனங்களின் பாலை சோதனை செய்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடத்தில் பாலை சோதித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி தனது அறிக்கையில் பாலில் கலப்படம் குறித்து வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பால் உற்பத்தியில் இந்தியாவில் மாடுகளே இல்லாத நிலையில் தன்னிறைவு அடைந்த நாடாக, உலகில் பால் உற்பத்தியில் முதல் நாடாக இருப்பது எப்படி சாத்தியம் என்று தவறான தகவல்களை விஷமிகள் பரப்புவதாகும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நாட்டு மாடுகள் அழிவின் விளிம்பில் இருந்தாலும், கலப்பின மாடுகள் மற்றும் ஜெர்சி இன மாடுகளால் பால் உற்பத்தி தாராளமாகவே நடைபெற்று வருவதாக கூறிய பொன்னுசாமி தவறான தகவல்களை தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து வதந்திகளை பரப்புவோர் மீது தமிழக பால் முகவர்கள் சங்கம் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.