விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் குழுவினர், அப்போராட்டத்தில் 100-வது நாளான திங்கள்கிழமை இரவு தமிழகம் கிளம்பியுள்ளனர்.

Special Correspondent

"டெல்லியில் எங்களுக்கு சோறு போட்ட சீக்கிய குருத்வாராவைச் சேர்ந்தவர்களை மிரட்டினார்கள். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில், நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிக்கு அடிப்படை சிகிச்சை மட்டுமே வழங்கி, ராபிஸ் தடுத்து ஊசி இல்லை என்று கூறி மறுத்தனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் எனக்கு டெங்கு சிகிச்சை மறுக்கப்பட்டது," என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் வரும் நவம்பர் மாதம் 30-ஆம் தேதி, 29 மாநிலங்களிலும் இருந்து வரும் விவசாயிகள் பங்கேற்கும் போராட்டம் டெல்லியில் நடைபெறும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து அப்போராட்டத்திற்கு சுமார் 5,000 விவசாயிகளை அழைத்து வரும் முயற்சியில் இருப்பதாகவும் அய்யாக்கண்ணு கூறினார்.