உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பிஜேபி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மை நாட்களாக அங்கு ஆக்சிஜன் இல்லாமல் 300க்கும் மேற்பட்ட குழைந்தைகள் இறந்த நிலையில் தாஜ்மஹால் குறித்து பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

Special Correspondent

இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு ஆக்ரா அருகே ஜலாவுன் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் அண்மையில் வயலை உழுது பயிர் செய்வதற்காக விதைகளை தூவியிருந்தார்.

கடந்த புதன்கிழமை பிஜேபி அமைச்சர் ஜெய்குமார் சிங் மற்றும் அவரை பின்தொடர்ந்து வந்த ஏராளமான பாதுகாப்பு வாகனங்கள் ஆதரவாளர்கள் வாகனங்கள் உழுது விதைக்கப்பட்ட வயல் வெளியின் மீது சீறி பாய்ந்து சென்றுள்ளன. இதை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

அடுத்தடுத்து வாகனங்கள் சென்றதால் தனது வயலில் தூவப்பட்ட விதைகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். எனவே தனக்கு பயிர் இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனே தகவல் அறிந்த அமைச்சர் உடனடியாக விவசாயியை அழைத்து ரூ.4 ஆயிரத்தை அவரது சட்டை பையில் வீசி விட்டு சென்றதை கண்டு விவசாயி மேலும் அதிர்ச்சி அடைந்து ஏதும் செய்ய முடியாமல் கண்ணீர் விட்டார் என அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 11ம் தேதி தனது முதல் பட்ஜெட்டின் போது முதல்வர் யோகி விவசாயி கடன் தள்ளுபடி அறிவித்திருந்தார். அதில் விவசாயி பலருக்கும் ரூ.1 கடன் தள்ளுபடி செய்ததாக தகவல் வந்தது என்கிறார்கள் வருத்தமுடன் உத்திர பிரதேச விவசாயிகள்.