தமிழ்ப் பெண்ணான சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாளப் படம் மூலமாக உச்சக்கட்டப் புகழை அடைந்தார்.

Special Correspondent

தாம்தூம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவரை உலகுக்குப் பெரிதாக அறிமுகப்படுத்தியது பிரேமம் படம்தான். இதன்பிறகு ஒரு மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். தமிழில் கரு, மாரி 2 என இரு படங்களில் நடித்துவந்தாலும் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

சமீபத்தில், சாய் பல்லவியை தெலுங்கு ஊடகங்கள் மலையாளி என்று குறிப்பிடுவதால் அவர் வருத்தம் அடைந்துள்ளார். தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண், எனவே என்னை மலையாளியாகக் கருதவேண்டாம் என தெலுங்குப் பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்செய்தி மலையாள ஊடகங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பி முக்கியத்துவம் பெற்றுள்ளது.