தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழில் மைனா, தலைவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஒரு வினியோகஸ்தரிடம் இருந்து பென்ஸ் எஸ்.கிளாஸ் காரை வாங்கினாராம். இதன் விலை ரூ.1.12 கோடியாகும்.

Special Correspondent

பின்னர் காரை கேரளாவுக்கு கொண்டு சென்றார். கொச்சியில் தங்கி வருகிறார்.ஒரு மாநிலத்தில் காரை நிரந்தரமாக வைத்து ஓட்ட வேண்டும் என்றால், அங்கு தான் பதிவு செய்ய வேண்டும்.

ஆகவே இந்த காரை கேரளாவில் பதிவு செய்தால் அரசுக்கு ரூ.20 லட்சம் வரை வரி கட்ட வேண்டும். புதுச்சேரியில் ரூ.1.15 லட்சம் வரி கட்டினால் மோதுமானதாகும். புதுச்சேரியில் ஒரு காரை பதிவு செய்ய வேண்டும் என்றால் நிரந்தர முகவரி இருக்க வேண்டும்.

இதற்காக அமலாபால் புதுச்சேரியில் செயின்ட் தெரெசா தெரு திலாசபட்டி என்ற முகவரியில் காரை பதிவு செய்துள்ளார். பதிவு செய்த அந்த வீட்டில் தங்கியிருப்பது பொறியியல் கல்லூரி மாணவர் ஆவார். அவருக்கு நடிகை அமலாபால் குறித்தோ, அவரது முகவரியில் கார் பதிவு செய்தது குறித்தோ எதுவும் தெரியாது. புதுச்சேரியில் காரை பதிவு செய்ததன் மூலம் நடிகை அமலாபால் பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் அறிந்ததும் எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். போலி முகவரியில் வாகனத்தை பதிவு செய்ததால் 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் செய்திகள் : கடனைத் திரும்பிச் செலுத்தாததால் ஏலத்திற்கு வரும் இயக்குனர் பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்