கதிராமங்கலம் மக்களுக்காக போராடியவர் சேலம் மாணவி வளர்மதி. கதராமங்கலத்தில் போராட்டததை தூண்டியதாக இவரை தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கோவை மத்திய சிறையில் அடைத்தது.

Special Correspondent

வளர்மதியின் தந்தை மாதையன் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் சேலம் மாநர காவல் ஆணையர் கடந்த ஜூலை 17ஆம் தேதி பிறப்பித்த வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

முன்னதாக துண்டு பிரச்சாரம் கொடுத்து மக்களுக்கு நெடுவாசல் கதிரமங்கலம் உண்மையை சொன்ன காரணத்திற்கு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எடப்பாடி பழனிச்சாமி பி.ஜே.பி கட்சியின் ஆணைப்படி செயல்பட்டதாக கூறி கண்டித்தனர்