நீட் தேர்வு தனது மருத்துவக் கனவைப் பறித்ததால், அரியலூர் அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து உயிரிழந்தார். அனிதாவின் மறைவையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இதனிடையே, விஜயகாந்த் தேமுதிக கட்சி நிர்வாகி ஜி.எஸ். மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் செய்த மனுவின் அடிப்படியில்...

Special Correspondent

"நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலே, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அமைதியான போராட்டத்துக்கும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் போராட்டத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. ஆனால், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் இருக்கக் கூடாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை நிறுத்தவில்லை . தமிழ்நாட்டில் பல்வேறு இடத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போரட்டம் தொடர்ந்து உள்ளனர் முக்கியமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவிகள் 3 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நடத்தி அதிலும் 2 மணி நேரம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பிறகு 1 மணி நேரத்துக்கு மேல் பள்ளி வளாகத்துக்குள் போராட்டம் நடத்திய வந்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் சாலையில் அமர்ந்து மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று மாணவிகள் கூறியுள்ளனர். மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி வளாகத்துக்குள் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவியது.

போராட்டத்தல் ஈடுபட்டு உள்ள மாணவிகளுடன் சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் பேச்சு வார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது நடவடிக்கை இருக்காது என்று கல்வி அதிகாரி உறுதி அளித்துள்ளார். கல்வி அதிகாரி உறுதியை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் அவர்கள் கொடுத்துள்ள உறுதிமொழியை மீறி 3 மாணவிகளை கைது செய்துள்ளதாக தினமலர் ஏடு சொல்கிறது.