ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வழங்கக்கூடிய தடுப்பு மருந்துகளை படிப்படியாக ஒரே ஊசியில் வழங்குகின்ற தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

Special Correspondent

"இந்த கண்டுபிடிப்பில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" என்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பேராசிரியர் ராபர்ட் லான்கர் தெரிவித்திருக்கிறார்.

"முதல்முறையாக, தடுப்பு மருந்துகள் தனித்தனி அணுக்கூறுகளில் நிரப்பப்பட்டு வைத்திருக்கும் ஒரு மருந்து நிலையத்தையே நாம்மால் உருவாக்க முடிந்துள்ளது. இந்த அணுக்கூறுகள் ஒவ்வொன்றும் துல்லியமாக, கணிக்கக்கூடிய நேரத்தில் மருந்துகளை வெளிவிடும் வகையில் நம்மால் மாற்றி அமைத்துக்கொள்ள முடியம்.

இதனால், தடுப்பு மருந்துகள் பல ஏற்கெனவே நிரப்பப்பட்ருக்கு நுண்ணிய அணுக்கூறை ஒரே ஊசியில் உடலுக்குள் செலுத்தி பல்வேறு தடுப்பு மருந்துகளின் நோய் தடுப்பு திறனை குறிப்பிட்ட இடைவெளிகளில் பெற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறுகிறார்.

இந்த அணுக்கூறு, நோய் தடுப்பு மருந்துகளால் நிரப்பப்பட்டு , மூடியால் இறுக்கமாக மூடப்பட்ட காஃபி கோப்பைகளின் சிறிய மாதிரியைபோல தோன்றுகின்றன.

இந்த சிறிய கோப்பைகள் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றப்படி மாற்றியமைக்கப்படலாம் என்பது இதில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதன் மூலம் சரியான நேரத்தில் அந்த சிறு கோப்பையிலுள்ள மருந்தை வெளிவிடும் வகையில் நாம் அமைத்துகொள்ள முடியும்.

ஒரே ஊசியில் வழங்கக்கூடிய இந்த தடுப்பு மருந்து நுண்ணிய உறைகளில் சேமிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவுடன் தொடக்க மருந்து அளவை அது வெளிவிடும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளிகளில் அதே நோய் எதிர்ப்பை மேம்படுத்தும் மருந்துகளை படிப்படியாக வெளிவிடும் வகையில் இந்த பொறிமுறை அமைந்திருக்கும்.

சோதனை எலிகளில் நடத்தப்பட்ட இதற்கான தொடக்க ஆய்வுகளில் இந்த தொழில்நுட்பம் செயல்பட்டுள்ளதாக 'சைன்ஸ்' பத்திரிகை விவரிக்கிறது.