ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தகிரிக்கெட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

Special Correspondent

ஆரம்பத்தில் ரோகித் சர்மாவுடனும், பின்னர் டோனியுடன் இணைந்து விளையாடிய ஜாதவ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர், இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கியவர்கள் டோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர்தான். விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டிருந்ததால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி 88 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.

அன்றே விளையாட்டு போட்டி முடித்தவுடன் கிளம்பி செல்லும் போது சென்னை ஏர்போர்ட்டில் டோனி அயர்ச்சியில் ஏர்போர்ட் தரையிலே படுத்து கொண்ட படத்தை BCCI வெளியிட...

அப்படம் பெரும் வைரல் ஆகி உள்ளது. சமூக வலைதளத்தில் டோனியின் ரசிகர்கள் அவரின் எளிமை குணத்தை கொண்டாடி வருகின்றனர்