மதுரை வைகை ஆற்றில் பல கட்டிடங்கள் வெளிவிடும் கழிவு நீர் நேரிடையாக கலப்பதாகவும், எனவே இதனைக் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உத்தரவிடுமாறும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செயயப்பட்டது தெரிந்ததே...

Special Correspondent

இந்த மனு திங்களன்று விசாரைணக்கு வந்த பொழுது மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ் சங்கர் அறிக்கை ஒன்றை நீதிமன்றதில் தாக்கல் செய்தார்.

அதில் தெரிவித்த விவரம் மதுரை வைகை ஆற்றில் 363 கட்டிடங்களின் கழிவுநீர் நேரடியாகக் கலக்கிறது. இந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார் .

நேரடியாக 363 கட்டிடங்களின் கழிவுநீர் வைகையில் கலக்கிறது விவரம் பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது . கலக்கி விடுவதை தடை செய்யாமல் வேடிக்கை பார்த்த அல்லது பணத்தை கையூட்டக பெற்று கொண்டு அதற்கு துணை போன அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்ற கேள்விகளை நீதிமன்றம் கேட்டு இருக்க இருக்க வேண்டாமா என்று சுற்றுப்புற சூழ் ஆர்வலர்கள் கேக்கிறார்கள். .