ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சிகள், அரசு பள்ளிகள் தரம் உயர்த்த குரல் கொடுக்காதது ஏன் என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். போராட்டக் காலத்தில் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுழப்பியுள்ளார். அக்டோபர் 4-ம் தேதி அரசு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார் .

Special Correspondent

நீதிபதிகள் குறித்து இணையத்தில் விமர்சித்தவர்களை யார் இயக்குகிறார்கள் என கண்டறிய வேண்டும் என்றும் கிருபாகரன் கூறியுள்ளார். கருத்து சுதந்திரம் என்பதின் பேரில் நீதிபதிகளையும் நீதித்துறையும் விமர்சிப்பது ஏற்கத்தக்கதது அல்ல என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் . இதனை தொடந்து ஆசிரியர் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருபாகரனை இணையத்தில் விமர்சித்ததற்க்கு நடவடிக்கை எடுக்கப்போவது தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத்து தீர்ப்புகளை விமரிசிப்பது தவறல்ல என்றும் நீதிபதிகளை விமர்சிப்பது மட்டுமே தவறு என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெவித்துள்ளனர் .

இது தொடர்பாக புலனாய்வு இணைய செய்தி சவுக்கின் ஆசிரியர் ஆச்சிமுத்து சங்கர் தெரிவித்த ஒரு வழக்கின் விவரம் "சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு ஒரு வழக்கு. அதிமுக அரசால் வீரப்பனை கொல்வதற்காக நியமிக்கப்பட்ட அதிரடிப்படையில் இருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு படி கூடுதல் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அது ஒரு முறை மட்டுமே, அந்த பணி மூப்பின் அடிப்படையில் அடுத்த பதவி உயர்வு கொடுக்க கூடாது என்று வழக்கு.

நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு அடங்கிய அமர்வு, இரண்டாவது முறை பதவி உயர்வு வழங்கப்பட்டது தவறு என்று விரிவான தீர்ப்பை வழங்கியது. இந்த பதவி உயர்வை வழங்கியது ஜெயலலிதா அல்லவா? நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, அனைவருக்கும் இரண்டாவது முறை பதவி உயர்வு வழங்கினார்.

அப்போது நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த இரண்டாவது பதவி உயர்வு என்பது குழப்பமே இல்லாத தெளிவான நீதிமன்ற அவமதிப்பு. ஆனால் அந்த வழக்கில் கடைசி வரை, ஒரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. அப்போது ஜெயலலிதா இருந்தார். ஆனால் ஜெயலலிதா இப்போது இறந்தும் அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்றும் நிலுவையில் இருக்கிறது."

மேலும் சங்கர் "அதிகாரம் இல்லாதவர்கள் மீது பாயும் சட்டமானது அதிகாரம் பெற்ற இடத்தில் அதே விரியமுடம் செயல் பட வேண்டும்" என்ற கருத்தை முன்வைக்க இந்த கருத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது...