உங்கள் அனைவரிடம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன் மன்னித்துக்கொள்ளுங்கள், பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று சொல்லியிருப்போம். ஆனால் உண்மையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை அது தான் உண்மை.

Special Correspondent

அவன் பாத்தான், இவன் பாத்தான் என்று தினமும் சொன்னது எல்லாம் பொய். ஏனெனில் எங்களுடைய கட்சியின் ரகசியம் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்று பொய்களை சொன்னோம். இது தான் உண்மை. என்று பொது கூட்டத்தில் பேசினார் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

இதனை கேட்ட தினகரன் வெகுண்டு அளித்த பேட்டியில் "சசிகலா முதல்வராக வேண்டும் என்று கண்ணீர்விட்டு கேட்டவர் தான் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர் குடும்பத்தையே என் பொண்டாட்டி இல்லை, புள்ளைகள் இல்லை என்பார். அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு எங்கள் சித்தியையே சிகிச்சை அறைக்குள் விடவில்லை. ஏப்போதாவது மருத்துவர்கள் சொன்னால் 2 நிமிடங்கள் போய் பார்ப்பார். நோய்தொற்று ஏற்படும் என்பதால் தான் ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை" என்றார்.

இதன் எதிரொலியாக, அக் 7 2016 அன்று ஓ பன்னிர் செல்வத்திற்கு கொடுத்த ஜெயலலிதா துறைகள் எப்படி வழங்கப்பட்டன, மற்றும் மூன்று இடை தேர்தல் நேரத்தில் நவ் முதல் வாரத்தில் பெறப்பட்ட ஜெயலலிதா கைரேகை போட்டது யார் என்று அன்றைய எதிர்கட்சி திமுக எழுப்பிய சந்தேகங்களை இன்றைய இருவரின் பேச்சு ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்...

மேலும் சமூக வலைத்தளங்களின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மத்திய அரசின் AIMS மருத்துவர்களையும் ஜெயலலிதா Z பிளஸ் பாதுகாப்பு விலகல் சம்பந்தமாக விசாரணையில் மோடி மத்திய அரசின் பங்கு பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று பதிவர்கள் எழுதிவருவதும் வைரலாகி வருகிறது...