அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னிர் செல்வம் ஆகியோருக்கு ப்ரோக்கர் வேலை பார்த்தார் என்று சமூகவலைதளத்தில் அதிகமாக விமர்ச்சிப்பட்ட வித்யா சாகர் ராவ் அதிரடியாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

Special Correspondent

அவருக்கு பதிலாக முழு நேர பொறுப்பில் தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்து வருகிறார். புரோஷித் தமிழகத்துக்கு மாற்றப்பட்டதால் மேகாலயா கவர்னராக கங்கா பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு ஏப்ரல் 16 ம் தேதி பிறந்தவர். இவர் அசாம் கவர்னராக பணியாற்றி உள்ளார். நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்த 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். துவக்கத்தில் இவர் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் இருந்த இவர் 1991 ல் பா.ஜ.க-வில் இணைந்தார்.

இதனை தவிர புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (செப்.,30) உத்தரவு பிறப்பித்தார். அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை கவர்னராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

அசாம் கவர்னராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி.மிஸ்ரா, பீஹார் கவர்னராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஜெயலலிதா கட்டை விரலை காட்டினார் மகிழ்ச்சியாக உள்ளார் என்று ஆளுநர் ராவ் சொன்னதை தினதந்தி, தினமலர் மற்றும் தினமணி உள்ளிட்ட லீடிங் தினசரிகள் தீர விசாரிக்காமல் கொட்டை எழுத்துக்களில் தலைப்பு செய்தியாக போட்டது நாம் அறிந்தததே.

தற்போது அமைச்சர்கள் ஜெயலலிதா பார்த்த விஷயத்தில் மாறி மாறி பேசிய நிலையில் ஆளுநர் கூட்டு சதி வெளிப்படுவதால் அவரையும் சேர்ந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக செயலை தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில் அதிரடியாக ஆளுநர் ராவ் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.