தற்போது அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதா பார்த்த விஷயத்தில் மாறி மாறி பேசிய நிலையில் ஆளுநர் கூட்டு சதி வெளிப்படுவதால் அவரையும் சேர்ந்து சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று திமுக செயலை தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில் அதிரடியாக ஆளுநர் ராவ் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

Special Correspondent

ஜெயலலிதாவின் உடல் நலத்தை அறிவதற்காக 2 முறை அப்பல்லோவுக்கு விசிட் அடித்தார் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசகராராவ்.

இரண்டு முறையும் ராஜ்பவன் அறிக்கை அளித்தது. அதேபோல, மத்திய உள்துறைக்கும் இரண்டு முறை தனது ரிப்போர்ட்டை கவர்னர் அனுப்பி வைத்திருக்கிறார்.

ராஜ்பவனிலிருந்து பொதுமக்களுக்காக வெளியிடப்பட்ட அறிக்கைக்கும், உள்துறை அமைச்சகத்துக்கு வித்யாசகரராவ் அனுப்பி வைத்த அறிக்கைக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, மக்களுக்காக கொடுக்கப்பட்ட அறிக்கைக்கு நேர் எதிராக இருப்பதாகவே டெல்லியிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

ஏனெனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கவர்னரின் அறிக்கை குறித்து மத்திய உள்துறையிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கிறது மத்திய உள்துறை. அதனாலேயே, ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய அறிக்கை பல உண்மைகளை சொல்வதாகவே நம்பப்படுகிறது. ஜெ.மரணத்தின் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டிருப்பது உண்மையென்றால், வித்யாசாகரராவிடம் முழுமையாக விசாரிக்க வேண்டியது கட்டாயம்.

அதனால், தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் பதவியிலிருந்து வித்யாசகர்ராவ் விடுவிக்கப்பட்டிருந்தாலும் மகாராஷ்ட்ராவின் கவர்னராக அவர் இருப்பதால் அவரை நேரில் சந்தித்து விசாரணை நடத்துவாரா, நீதியரசர் ஆறுமுகசாமி?

நமது அரசியலமைப்புச் சட்டம் கவர்னருக்கென்று சில விசேச சலுகைகளையும் அதிகாரங்களையும் கொடுத்திருக்கிறது. அதனால், நீதி விசாரணைக்கு கவர்னரை உட்படுத்த முடியாது என்கிறார்கள்.

அதேபோல, சட்டச்சிக்கல்களைக் காரணம் காட்டி வித்யாசகரராவிடம் விசாரிப்பதை நீதியரசர் ஆறுமுகசாமியும் தவிர்க்கக்கூடாது என்பதே சட்டவல்லுநர்களின் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.