பிள்ளைகளுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதாக்கூறி தனியார் பயிற்சி நிலையங்களுடன் சேர்ந்து தனியார் பள்ளிகள் மூன்று லட்சம்வரை கட்டணம் கேட்க ஆரம்பித்துள்ளன...

+2 எழுதும் ஒன்பது லட்சம் மாணவர்களின் சுமார் மூன்று லட்சம் பேர் மருத்துவ கனவு சுமக்கிறார்கள். இது தான் target market...

இதில் சுமார் 50% மாணவர்களின் பெற்றோர் வாயை காட்டி வயிற்றை கட்டி படிக்க வைப்பார்கள்... இது தான் இந்தியாவிலே அதிக அரசு மருத்துவமனை கொண்ட தமிழ்நாட்டின் நீட் வணிக சந்தை மதிப்பு ( 300000 x 300000) = 90000000000 ( 9000 கோடிகள்)

Special Correspondent

இதையே அகில இந்திய அளவில் எடுத்தீர்கள் என்றால் நீட் பயிற்சி சந்தை மதிப்பு 200000 கோடிகள் குறையாமல் வரும் ...

இதில் பெரும் சோகம் என்னெவென்றால் வருடங்கள் செல்ல போட்டி இரண்டாம் வருட மூன்றாம் வருடம் காத்து இருந்து எழுதுவதால் போட்டி அதிகமாகி நாம் மூன்று வருட காத்து இருந்து நீட் எழுதலாம் என்ற நம்பிக்கை நீட் பயிற்சி ஏற்றி விட்டு ஆயிரத்தில் ஒருவருக்கு இடம் என்பது மூவாயிரத்துக்கு ஒருவர் என்ற நிலைக்கு சென்று பலரின் கனவுகள் மெல்ல மெல்ல இனி அழிக்க தொடங்கும்..

மாநிலத்தில் புகுந்து இடஒதுக்கீடு கோராமல் என்ன செய்து இருக்க வேண்டும் மத்திய அரசு... தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைத்த இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவு படுத்தி இருத்துருக்க வேண்டும் . மாநிலங்களின் வளர்ச்சி என்பது அந்த மாநிலத்தில் மக்கள் வரி கட்டுதல் மூலம் மட்டுமே உருவானவை அதில் தீடிரென ஒதுக்கீடு கேட்பது மட்டும் இல்லாமல் ஒரு போட்டி முறையை உள்ளே புகுத்தி ., அந்த போட்டி களத்தை மூன்று ஆண்டுகள் விரிவாக்கி புதிதாக +2 படிக்கும் மாணவர்களை மேலும் மேலும் பணத்தை செலவு செய்வது மட்டுமில்லை பயிற்சி போட்டி என்ற பெயரிலே நீட் மன சோர்வை உண்டாக்கி விடும் ...

Special Correspondent

சரி பயிற்சி போட்டி என்ற விஷயத்தில் ஒழுங்கா இருக்கிறார்களா என்றால் குஜராத்தில் ஒரு பேப்பர், தமிழ்நாட்டில் ஒரு பேப்பர் மேற்கு வங்காளத்தில் ஒரு பேப்பர், ஆனால் பெயரோ ஒரே இந்தியா ஒரே தேர்வு ..

சரி ஒரே இந்தியா பல தேர்வு தாள் ஓட்டையை விடுவோம்... சட்டையை கிழிச்சி, ஜிமிக்கியை நோண்டி மாணவர்களை நிமிர்த்தி தேர்வு எழுத வைத்தாலும் நீட் தேர்வு முறையில் இறுதியாக Software hack செய்து மார்க் மாற்றி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் வழக்கு மட்டும் இல்லை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்தும் விட்டார்கள்...

அதிலே ப்ரோமெட்ரிக் னும் அமெரிக்கா நிறுவனத்துக்கு டெண்டர் இல்லமால் ஆணையை வேறு வழங்கி உள்ளார்கள் பிஜேபி அரசின் மந்திரிமார்கள்.

ஈற்றலும் காத்தலும் வகுத்தலும் வல்லது அரசு என்கிறார் வள்ளுவன் இங்கே 500 1000 பண மதிப்பு இழப்பில் ( demonetisation ) தொடங்கி, GST 28% உலகத்திலே அதிக வரி, உலகிலே அதிக பெட்ரோல் விலை, என்ற வரிசையின் தொடர்பாக இப்போது நீட் என்ற பெயரிலே சுமார் 200000 கோடிகள் வணிக சந்தையை மக்களின் அடிமடியில் இருந்து கல்வி என்ற பெயரிலே எடுக்கும் ஊழல் நடக்கவிருக்கிறது

மாபெரும் வணிக சந்தையை உருவாக்கி, பணத்தை மட்டுமே மக்களிடம் இருந்து புடுங்குவதும், அவர்களை தவிக்க விடுவதும் வேலையை செய்வதா அரசின் வேலை ...

புதிய இந்தியா என்ற பெயரிலே இன்னும் என்ன என்ன கொடுமை எல்லாம் இந்தியா மக்கள் சந்திக்க வேண்டி உள்ளதோ... காலம் தான் பதில் சொல்லும்...

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு