சாரண - சாரணியர் இயக்கத்தின் பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில தலைமையகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

Special Correspondent

முன்னதாக எச். ராஜாவை போட்டியின்றி தேர்ந்தேடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன, பிஜேபி மூலம் எடப்பாடி அரசால் பெரியார் கொள்கைவாதி மணி அவர்களை வாபஸ் பெறுமாறு மிரட்டலும் விடுக்கப்பட்டது . எக்காரணத்தை கொண்டும் எச். ராஜாவுக்காக பின் வாங்கமாட்டேனென்று மணி அவர்கள் உறுதியாக இருந்ததால், வாக்காளர்களை கல்வித்துறை மூலமாக மிரட்ட தொடங்கியது அரசு.

மணியின் மூலம் இதனை அறிந்த திராவிட தலைவர் வீரமணி பிஜேபி தமிழக அரசின் உதவி மூலம் செய்யும் மிரட்டலை கண்டித்ததோடு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்.

பிரச்சனையை புரிந்து கொண்ட மு.க ஸ்டாலின் இதை எதிர்த்து உடனடியாக அறிக்கை விட்டார். அதன் பிறகே எச்.ராஜா போட்டியிடும் விஷயமே ஊடகங்கள் உட்பட வெளிஉலகுக்கு தெரிந்தது. முன்கூட்டியே யாருக்கும் தெரியாததற்கு காரணம் ராஜா வேட்புமனுவை கூட வெகு தந்திரமாக அவர் பெயரில் வாங்கவில்லை .

Special Correspondent

இதில் மொத்தம் 504 வாக்குகளில் தலைவர் பதவிக்கு 286 வாக்குகளும், துணைத்தலைவர் பதவிக்கு 285 வாக்குகளும் பதிவாகியுள்ளன. காலை 10மணி அளவில் தொடங்கிய இநத வாக்குப்பதிவு மதியம் 2மணி அளவில் நிறைவுப்பெற்றது. இதையடுத்து பிற்பகல் 3மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் பா.ஜ.கவின் தேசிய செயலாளரான எச். ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட பள்ளி கல்வியின் முன்னாள் இயக்குநர் மணி மொத்தமுள்ள 286 வாக்குகளில் 232 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எச்.ராஜா 46 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். இதில் பதிவான மொத்த ஒட்டுகளில் 2 ஒட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

திராவிட முன்னோடி தலைவர் பெரியார் அவர்களை செருப்பால் அடிப்பேன் என்றும் , தன்னை விமர்சனம் செய்பவர்களை எல்லாம் "ஆன்டிநேஷனல் "என்று சொல்லும் வழக்கம் கொண்டவர் எச். ராஜா . சமீபத்தில் "நீட் ஆதரித்து திருச்சி கூட்டத்தில் கூட்டம் இல்லையே ஏன் கூட்டம் இருப்பது போல போலி படத்தை போட்டீர்கள்" என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "மீடியா எல்லாம் ஆன்டிநேஷனல் " என்ற இவர் சர்ச்சை மிகுந்த கருத்தால் எரிச்சல் அடைந்த இளைஞர்கள் இவரின் தோல்வியை பல்வேறு மீம்ஸ் பதிவுகளில் கொண்டாடி அவைகள் பெருவாரியான பதிவுகள் வைரல் ஆகி வருகிறது.

ராஜா சென்ற 2014 பாராளுமன்ற தேர்தலில் இவருடைய சிவகங்கை தொகுதியில் நின்றும் டெபாசிட் இழந்தார் . அதனால் வெறுப்புற்ற அவர் 2016 சட்டமன்ற தேர்தலில் இவரின் ஜாதி மக்கள் நிரம்பிய திநகர் தான் வேண்டும் என்று அடம் பிடித்து நின்றும் அவருடைய மக்கள் அவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு டெபாசிட் கூட பெறாமல் செய்தனர்.

எச்.ராஜா திமுக கூட்டணி பலத்தால் மட்டுமே ஒரே ஒரு முறை 2001 எல்எல்ஏ ஆனவர் என்பதும் ., முதன் முதலாக காரைக்குடி நகராட்சி தேர்தலில் 13வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார் எனவும் குறிப்பிடத்தக்கது.

ராஜா குடும்பம் மீது அவர் கட்சியினரே தெரிவித்த சீட் பாண்ட் மோசடி விவரம் அறிய சொடுக்கவும்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு