சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் வெளிக்காட்டும் மேலும் சில பொருட்கள் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Special Correspondent

தமிழ் பிராமி எழுத்துக்களை கொண்ட மண் ஓடுகள் மற்றும் 3-4 சென்டிமீட்டர் நீளமுடைய தங்க ஊசியும் அகழாய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் மூன்று பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 8,300 தொல்பொருள்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் செய்திகள் : அதிமுக துணையோடு கிழடியில் தமிழர்களின் பண்டைய நாகரிகம், முடக்கம் ஸ்டாலின் வேதனை